1. மாணவர்கள் தூய சீருடை அணிதல் வேண்டும்.
  2. மாணவர்கள் வகுப்புகளுக்குத் தவறாமல் குறித்த நேரத்தில் வர வேண்டும்.
  3. காலம் கடந்து வரும் மாணவர்கள் ஆசிரியரின் அனுமதி பெற்ற பின்னரே வகுப்பறைக்குள் வர வேண்டும்.
  4. ஆசிரியரின் அனுமதியின்றி மாணவர்கள் வகுப்பை விட்டு வெளியே செல்லக்கூடாது.
  5. கல்லூரிக் கட்டணம் செலுத்துதல், நூலகத்தில் நூல் பெறுதல் போன்ற காரணத்திற்காக மாணவர்கள் வகுப்பறையை விட்டுச் செல்லவோ காலங்கடந்து வரவோ கூடாது.
  6. கல்லூரிச் சுவர்களில், வகுப்பறைச் சுவர்களில், கரும்பலகைகளில் எழுதுவதோ, அறிவிப்பு ஒட்டுவதோ தண்டனைக்குரிய குற்றமாகும்.
  7. ஆசிரியர்கள் விடுப்பில் சென்று வகுப்பு இயங்காநிலை ஏற்படும் பொழுது மாணவர்கள் அமைதியாக நூலகத்திற்குச் சென்று அங்கு செய்தித்தாள் மற்றும் வார ஏடுகளைப் படித்துப் பயன்பெறுதல் அறிவுடைமையாகும். அவ்வாறன்றி நடைபாதைகளில் அமர்வதோ கூச்சலிடுவதோ கூடாது. முறையாக செயல்படும் வகுப்புகளுக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் ஒழுங்கீனமாக நடக்கும் மாணவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள்.
  8. தங்கள் வகுப்பறைகளையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்வது ஒவ்வொரு மாணவரின் கடமையாகும்.
  9. அனுமதியின்றி மாணவர்கள் முதல்வர் அறை, அலுவலகம், ஆசிரியர் அறைகள்(துறைகள்) மற்றும் ஆய்வுக்கூடங்கள் ஆகியவற்றுக்குள் நுழையக்கூடாது.
  10. மாணவியர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள ஒய்வு அறைக்கோ அல்லது அப்பகுதிக்கோ மாணவர்கள் செல்லக்கூடாது.
  11. முதல்வரின் முன் அனுமதியின்றி கல்லூரியில் கூட்டம் நடத்தவோ, மாணவர்களிடையே எவ்விதமான அறிக்கையையும் சுற்றுக்கு விடவோ, அறிவிப்புப் பலகையில் எழுதவோ கூடாது.
  12. மாணவர்கள் சாதி, மதம், அரசியல் கட்சி தொடர்பான வேறுபாடுகளைச் கல்லூரிக்குள் கொண்டு வந்து பொது அமைதிக்குக் கேடான செயல்களில் ஈடுபடக்கூடாது. அப்படி ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.
  13. கல்லூரி சொத்துக்களைச் சேதப்படுத்துவது குற்றமாகும். வேண்டுமென்றோ, தற்செயலாகவோ கல்லூரி சொத்துக்களை சேதப்படுத்தினால் சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அதற்கான தொகையும் அபராதமாக வசூலிக்கப்படும்.
  14. மாணவர்கள் தமக்குக் குறைகள் இருப்பின் பொறுப்பாசிரியரிடமோ அல்லது தம்துறைத்தலைவரிடமோ சென்று முறையிட வேண்டும். மாணவர்கள் கூட்டமாக முதல்வரிடம் செல்லக்கூடாது.
  15. கல்லூரி விதிகளை மீறும் மாணவர்களுக்குத் தண்டனை அளிப்பதில் முதல்வரின் முடிவே இறுதியானது.
  16. தமிழ்நாடு கல்வி விதிகளின்படி ஒழுங்கற்று நடக்கும் மாணவ மாணவியர்களுக்கு ஒறுப்புக்கட்டணம் விதிக்கவும் (to impose fine) கல்லூரியிலிருந்து தற்காலிக இடைநீக்கம் செய்யவும் (to Suspend) இக்கல்லூரியிலிருந்து விலக்கவும் (to expel) கல்லூரி முதல்வருக்கு அதிகாரம் உண்டு.
  17. மாணவர்களின் செயல்பாடுகள் கல்லூரி நலனுக்கு உகந்ததல்ல என்று முதல்வர் கருதினால் அவர்கள் கல்லூரியிலிருந்து நீக்கப்படுவார்கள்.